வாழை தோட்டங்களை சூழ்ந்த மழைநீர் - பெரும் ஆபத்தில் படாத பாடுபடும் விவசாயிகள்

x

கோவையில் பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் வாழைத் தோட்டங்களை வெள்ள நீர் சூழ்ந்ததால் விவசாயிகள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை அடுத்துள்ள பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் வாழை விவசாயம் பெரும்பாலான பகுதிகளில் நடைபெறுகிறது...கடந்த சில தினங்களாக நீலகிரியில் பெய்த கனமழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து பில்லூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது... இதனால் பவானி மற்றும் மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து பவானி சாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் நீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் காந்தை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தை தொடும் அளவுக்கு நீர் தேங்கியுள்ளது...

ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள வாழைத் தோட்டங்களை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் வாழை விவசாயிகள் பவானி சாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் நடந்து ஆற்றைக் கடந்து வாழை தோட்டங்களுக்கு சென்று வாழைத்தார்களை வெட்டி மீண்டும் நடந்து ஆற்றைக் கடந்து கரைக்கு கொண்டு வந்து வாகனங்களில் ஏற்றி வெளி மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்