OMRல் தகர்த்தெறியப்பட்ட தரைப்பாலம்... சாலையில் பிரமாண்ட பள்ளம்... ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மக்கள்
க் ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் செங்கல்பட்டு ஓஎம்ஆர் சாலை புதிய தரைப்பாலத்தில் ஏற்பட்ட பள்ளம் ஏற்பட்ட நிலையில் உயர்மட்ட தரைப் பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கனமழையின் காரணமாக பல்வேறு ஏரிகளின் உபரி நீர் தையூர் ஏரியில் கலந்து அதன் மூலமாக வெளியேறும் உபரிநீர் ஓஎம்ஆர் சாலையை சூழ்ந்தது. இதனால் கடந்த 3 நாட்களாக போக்குவரத்து தடைபட்டது... கேளம்பாக்கம் திருப்போரூர் செல்லும் ஓஎம்ஆர் சாலையானது செங்கண்மால் பகுதியில் துண்டிக்கப்பட்டது... படூர் ஈஷா ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீரில் படூர் பேருந்து நிலையம் அருகே சாலை அடித்து செல்லப்பட்டுள்ளது. போக்குவரத்து துண்டிப்பால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்... நெடுஞ்சாலைத் துறையினர் துரித நடவடிக்கை மேற்கொண்டு சாலைகளை சீரமைத்தனர்... இருப்பினும் மழை நெருங்கும் சமயத்தில் ஓஎம்ஆர் சாலை விஜயசாந்தி அடுக்குமாடி குடியிருப்பு அருகில் புதிய தரை பாலம் கட்டும் பணியை நெடுஞ்சாலைத் துறையினர் துவங்கிய போது, அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்... தற்போது பெய்த கனமழையால் தரைப்பாலத்தைக் காட்டிலும் சுமார் 5 அடி உயரத்திற்கு மழை வெள்ளம் சென்ற நிலையில், திருப்போரூரிலிருந்து கேளம்பாக்கம் செல்லும் மற்றொரு சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது... தரைப்பாலத்தின் மீது தற்காலிக சாலையமைத்து வாகன போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், பழுதடைந்த சாலையையும் சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்... இப்பகுதியில் மழை வெள்ளத்தால் உயிர்கள் பலியாகியுள்ள நிலையில் உயர்மட்ட தரை பாலம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...