17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - முடிவுக்கு வந்த கிரிக்கெட் வாழ்க்கை...?
நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சேனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்துள்ளது.17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சந்தீப் லமிச்சேனை குற்றவாளி என அறிவித்த காத்மண்டு நீதிமன்றம், சந்தீப் லமிச்சேனுக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. லட்சக்கணக்கில் அபராதமும் சந்தீப் லமிச்சேனுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட லமிச்சேனை சஸ்பெண்ட் செய்வதாக நேபாள கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளது. தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் சந்தீப் லமிச்சேன் பங்கேற்க முடியாது என்றும் நேபாள கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது. 23 வயதே ஆகும் சந்தீப் லமிச்சேனின் கிரிக்கெட் வாழ்க்கை,,, சிறைத்தண்டனை மற்றும் சஸ்பெண்ட் நடவடிக்கையால் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படும் நிலையில், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் லமிச்சேனை விமர்சித்து வருகின்றனர்.