இன்றைய தலைப்பு செய்திகள் (02-01-2025) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines
சென்னை செம்மொழிப்பூங்காவில் 4வது மலர் கண்காட்சியை இன்று ரிப்பன்வெட்டி தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், அதனை பார்வையிட்டார்.
சென்னை செம்மொழிப் பூங்காவில் 4வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்....
கடந்த மாதம் 28ஆம் தேதி நடைபெற்ற பா.ம.கவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், தனது மகள் வழி பேரனான முகுந்தன் பரசுராமனை, பாமக மாநில இளைஞரணி தலைவராக நியமிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, செளமியா அன்புமணி தலைமையில் பாமக மகளிரணியினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் செல்போனை சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு...
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், வரும் 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இந்த பரபரப்பான சூழலில், லாஸ் வேகாஸ் Las Vegas நகரில் உள்ள ட்ரம்ப்பின் சர்வதேச ஹோட்டலுக்கு வெளியே, டெஸ்லாவின் சைபர் டிரக் வகை எலக்ட்ரிக் கார் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.