இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (12-08-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x

திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய 4 புதிய மாநகராட்சிகள் இன்று உதயம்...

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலைக்கு அழைப்பு...

கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்ட விவகாரம்...

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே, கடையில்

பத்து ரூபாய் குளிர்பானம் வாங்கி குடித்த 5 வயது சிறுமி, வாயில் நுரை தள்ளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளிர்பானத்தின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்... பின்னணியை விவரிக்கிறார் செய்தியாளர் தசரதன்....

கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் இன்று மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுமாறு கோரிக்கை வலுத்துள்ள சூழலில், ஞாயிற்றுக்கிழமைக்குள் போலீசார் விசாரணையை முடிக்காவிட்டால், வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். செய்தியாளர் ரமேஷ்குமார் வழங்கிய தகவல்கள் இவை...

சென்னை மெரினாவில் அட்டகாசம் செய்த மாடுகள்... பிடிக்க சென்ற அதிகாரிகளுடன் உரிமையாளர்கள் வாக்குவாதம்...


Next Story

மேலும் செய்திகள்