இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (28-07-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines
முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்று திறக்கப்பட்டது...
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்....
முதலமைச்சர் ஸ்டாலினின் உத்தரவை தொடர்ந்து, காவிரி டெல்டா பாசனத்திற்காக, மேட்டூர் அணையில் இருந்து முதற்கட்டமாக இன்று 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதுகுறித்து, டெல்டா விவசாயிகளின் கருத்துகளை கேட்டறிந்தோம்... தகவல்களை விவரிக்கின்றனர் செய்தியாளர்கள் காமேஷ் மற்றும் அமிர்தலிங்கம்...
டெல்லி ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்திற்குள் மழைநீர் புகுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், 2 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். செய்தியாளர் ராஜா வழங்கிய தகவல்கள் இவை...
திருவனந்தபுரத்தில் உள்ள தியேட்டரில், தனுஷின் ராயன் படத்தை செல்போனில் பதிவு செய்த தமிழ் ராக்கர்ஸ் இணைய தளத்தின் அட்மினை, போலீசார் இன்று கைது செய்தனர். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து, செய்தியாளர் சிவசபாபதி வழங்கிய தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...
மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு, தமிழக அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்துத் தரப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று உறுதி அளித்துள்ளார். இதனிடையே, முந்தைய திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், தமிழகத்திற்கு எவ்வளவு நிதி கிடைத்தது? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இன்றைய நாளின் முக்கிய அரசியல் நிகழ்வுகளை விவரிக்கிறது பின்வரும் தொகுப்பு...