இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (26-07-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x

உத்தரபிரதேசம், குஜராத்துக்கு தலா ரூ.400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கண்டனம்...

மாரடைப்பு ஏற்பட்ட போதும் பள்ளி குழந்தைகளின் உயிர் காத்து, உயிரிழந்த தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநரின் குடும்பத்திற்கு, தமிழக அரசு சார்பில் 5 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது. மேலும், அவரின் படத்திற்கு பள்ளி மாணவர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. செய்தியாளர் ஜெகதீசன் வழங்கிய தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...

கிரிக்கெட் அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காத விரக்தியில், சென்னையை சேர்ந்த கிரிக்கெட் வீர‌ர் கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறார் செய்தியாளர் கசாலி...

மத்திய பட்ஜெட்டில், விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டிற்கு 20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கண்டனம் தெரிவித்துள்ளார். இதனிடையே, டெல்லியில் நாளை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.. இன்றைய நாளின் முக்கிய அரசியல் நிகழ்வுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...

ஒரு நாளுக்கு 3 முறைக்கு மேல் மலம் கழிக்கிறீர்களா? கதிகலங்க வைக்கும் புதிய ஆய்வு முடிவு பற்றியும், துறைசார் நிபுணருடன் சிறப்பு செய்தியாளர் ரஞ்சித் நடத்திய கலந்துரையாடலும் பின்வரும் தொகுப்பில்....


Next Story

மேலும் செய்திகள்