இரவு 9மணி தலைப்புச் செய்திகள் (06-07-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x

சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பிரேத பரிசோதனை நிறைவு

ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி உட்பட 8 பேர் கைது....

மத்திய பொது பட்ஜெட்டை வரும் 23ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்....

அயோத்தியை போல் குஜராத்திலும் பாஜகவை தோற்கடிப்போம்...

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அவரது உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது... செய்தியாளர்கள் தாயுமானவன், நிர்மல் வழங்கிய தகவல்கள் இவை...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் காரணங்களுக்காக கொலை நடக்கவில்லை என, சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் விளக்கம் அளித்துள்ளார். கொலைக்கான பின்னணியை விவரிக்கிறார் செய்தியாளர் சாலமன்....

படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங், தற்காப்புக்காக 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான, இத்தாலி தயாரிப்பு துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இருந்தபோதும் குற்றவாளிகள் அவரை சமயம் பார்த்து கொலை செய்துள்ளனர். இதுபற்றிய தகவல்களை விவரிக்கிறது பின்வரும் தொகுப்பு...

ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்திற்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே, இறுதி அஞ்சலி செலுத்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி நாளை தமிழகம் வருகை வருகிறார்... செய்தியாளர் ச‌சிதரன் வழங்கிய தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்