இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (28-06-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னையில் இன்று கல்வி விருது வழங்கும் விழா....

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் மோதும் பைடன் மற்றும் டிரம்ப் இடையே இன்று நேருக்கு நேர் விவாதம் நடைபெற்றது. அமெரிக்க வரலாற்றில் மோசமான அதிபர் என்ற பெயர் பெற்றவர் டிரம்ப் என ஜோ பைடன் விமர்சிக்க, பைடன் மீண்டும் அதிபரானால் அமெரிக்காவை யாராலும் காப்பாற்ற முடியாது என டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார்.


தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவில், 10 மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் விருது வழங்கி கவுரவித்தார். விழாவில் பேசிய அவர், தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்திருப்பது அச்சம் தருவதாக தெரிவித்தார். விஜய்யிடம் விருது பெற்ற மாணவர்களிடம் பேசினோம்... அண்மை தகவல்களுடன் இணைகிறார் செய்தியாளர் சதீஷ் முருகன்...

டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த 5 பேர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. செய்தியாளர் ராஜா வழங்கிய தகவல்கள் இவை...

முதியோர் உதவித் தொகை கோரி, பெட்ரோல் கேனுடன் போராட்டம் நடத்திய முதியவர்.... பெட்ரோல் பங்கிற்கே சீல் வைத்த அதிகாரிகள்....

நீட் விலக்கு மசோதாவுக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் என, சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கொண்டுவந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகளை விவரிக்கிறார் செய்தியாளர் சமயமணிவண்ணன்...

டி20 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில், இங்கிலாந்தை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு குறித்து ரசிகர்கள் தெரிவித்த கருத்துகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்