காலை 9 மணி தலைப்பு செய்திகள் (03-10-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

x

சமந்தா குறித்த சர்ச்சை பேச்சை திரும்ப பெற்றார் தெலங்கானா அமைச்சர் சுரேகா..

சமந்தாவும் அவரது ரசிகர்களும் மனம் புண்பட்டிருந்தால் நிபந்தனையின்றி திரும்பப் பெறுவதாக அறிவிப்பு.

தமிழக வெற்றிக் கழகக் கொடியில் யானை இடம்பெற்ற விவகாரம் குறித்து மீண்டும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்..

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளர் கருப்பையா தகவல்..

டெல்லியில், தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவர் சுட்டுக்கொலை.

காயத்துடன் சிகிச்சைக்கு வந்த 2 இளைஞர்கள் வெறிச்செயல்..

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா தொடக்கம்..

தசரா குழுவினர் மற்றும் வேடமணியும் பக்தர்கள் காப்பு கட்டி உற்சாகம்..

மதுஒழிப்பு மாநாட்டில் எவ்வித உள்நோக்கமும் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேச்சு..

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் மதுக்கடைகளை மூடினால், திமுகதான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் நம்பிக்கை..


Next Story

மேலும் செய்திகள்