இன்றைய தலைப்பு செய்திகள் (30-07-2024) | 9 PM Headlines | Thanthi Tv | Today Headlines

x

கேரள மாநிலம் வயநாட்டில் மூன்று இடங்களில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு...

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட மேப்பாடி, சூரல்மலை, முண்டகை பகுதிகளில் முழு வீச்சில் மீட்பு பணி...

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் மண்ணில் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுவதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கனமழை தொடர்வதால் மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செய்தியாளர் சிவசபாபதி வழங்கிய தகவல்கள் இவை.

நிலச்சரிவு ஏற்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் மண்ணில் புதைந்த வயநாட்டின் சூரல்மலை பகுதியில் இருந்து எமது செய்தியாளர் கார்த்திக் இணைகிறார். அவரிடம் கூடுதல் விவரங்களை கேட்டுப் பெறலாம்.

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்