காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (12-03-2025) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines
குமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு...
தேசிய கல்விக்கொள்கையை எக்காரணம் கொண்டும் தமிழக அரசு ஏற்காது.....
மக்களவையில், தான் பேசிய வார்த்தைக்கு மீண்டும் மன்னிப்பு கோரினார் தர்மேந்திர பிரதான்....
அநாகரிகம் என்ற வார்த்தைக்கு மன்னிப்பு கேட்க வைத்த நீங்கள், தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரை போற்றுவது ஏன்?....
மத்திய அரசைக் கண்டித்து திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன பொது கூட்டம்...
சென்னையில் பாஜக நிர்வாகி இல்ல திருமண விழாவில் சீமான், அண்ணாமலை திடீர் சந்திப்பு...
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு வரும் 14ம் தேதி முதல் Y பிரிவு பாதுகாப்பு....
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாசித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்...