இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (12-12-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines
- வரும் 15ம் தேதி அந்தமான் கடலோர பகுதியை ஒட்டி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது...
- வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 12 மணி நேரத்தில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறையும்...
- தமிழகத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை...
- பூண்டி நீர்த் தேக்கத்தில் இருந்து 5 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்... 40க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...
- திருவண்ணாமலையில் 2 ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலையின் மீது கொண்டு செல்லப்பட்டது, தீப கொப்பரை...
- ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்...
- நடிகை கீர்த்தி சுரேஷ் தனது 15 ஆண்டுகால காதலரான ஆண்டனியை கரம் பிடித்தார்...
- நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் பரிசாக பாடலை வெளியிட்ட கூலி படக்குழு...
Next Story