இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (20-03-2024)

x

சூடுபிடித்தது தேர்தல் களம்

முதற்கட்ட தேர்தலை சந்திக்கும், தமிழகத்தில் சூடுபிடித்தது தேர்தல் களம்.....

வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டது திமுக மற்றும் அதிமுக....

==============

திமுகவில் 11 புதிய முகங்களுக்கு வாய்ப்பு

மக்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார், முதல்வர் ஸ்டாலின்....

தேர்தலில் போட்டியிட 11 புதிய முகங்களுக்கு வாய்ப்பு.....

=============

10 சிட்டிங் எம்.பி.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு

டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதிமாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியனுக்கு மீண்டும் வாய்ப்பு.....

ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த், சி.என்.அண்ணாதுரை, ஜி.செல்வம் உள்ளிட்டோரும் அதே தொகுதிகளில் போட்டி....

=============

16 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக...

அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு....

16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.....

===========

காங்.,வேட்பாளர்கள் பட்டியல் - நாளை வெளியாகும்"

தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நாளை இரவுக்குள் வெளியிடப்படும்.....

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தகவல்.....

==================


Next Story

மேலும் செய்திகள்