காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (12-10-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

திருவள்ளூர் அருகே கவரப்பேட்டையில் சரக்கு ரயில் மீது பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பயங்கர விபத்து......

12 பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்று ஏறி தடம் புரண்டதால் ரயில் போக்குவரத்து பாதிப்பு...........


மெயின் லைனில் வருவதற்கு பதில் லூப் லைனில் பயணிகள் ரயில் இயக்கப்பட்டதே விபத்துக்குக் காரணம் என தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தகவல்

உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் பேட்டி


திருச்சியில் இருந்து 141 பயணிகளுடன் ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் திடீர் தொழில்நுட்பக் கோளாறால் பரபரப்பு.....

விமானிகள் சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை தரையிறக்கியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு.....


ஜம்மு கஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவுடன் தேசிய மாநாட்டு கட்சி துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா சந்திப்பு....

ஜம்மு காஷ்மீரில் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.....


தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் தனியார் பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கம்....

தொடர் விடுமுறையையொட்டி, திருவண்ணாமலை, திருச்சி, வேலூர் நகரங்களுக்கு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவதாக தகவல்....


Next Story

மேலும் செய்திகள்