மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (19-10-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் சகோதரர் கோபால் ஜோஷியை மகாராஷ்டிராவில் வைத்து கைதுசெய்த பெங்களூரு போலீசார்...
  • ஜே.டி.எஸ். கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வின் மனைவி அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை...
  • ஜார்க்கண்ட் மாநில பொறுப்பு டி.ஜி.பி. அனுராக் குப்தாவை உடனடியாக நீக்க மாநில அரசுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்...
  • சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில் அதிரடி...
  • கோவை மாவட்டம் வால்பாறையில் சிறுத்தை தாக்கி 4 வயது சிறுமி உயிரிழப்பு...
  • தந்தையுடன் கீரை பறித்துக் கொண்டிருந்த போது மறைந்திருந்த சிறுத்தை சிறுமியை இழுத்துச் சென்று கொன்றது...
  • சென்னை மணலி மாத்தூர் ஏரியில் நண்பர்களுடன் குளிக்கும் போது சேற்று மணலில் சிக்கி இரண்டு பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு...
  • தீயணைப்பு படையினர் சேற்று மணலில் சிக்கி இருந்த மாணவர்கள் இருவரையும் சடலமாக மீட்டு, விசாரணை...
  • தேனி ஆவினில், ஆய்வு நடத்திய மத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்...
  • ஆவின் நிர்வாகம் அனுப்பிய பதிலில் திருப்தி இல்லை எனக்கூறி, மீண்டும் அடுத்த கட்ட ஆய்வு நடத்த இருப்பதாக தகவல்...


Next Story

மேலும் செய்திகள்