மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (30-06-2024) | 4PM Headlines | Thanthi TV

x

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் முதுகலை மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் இந்த மாத இறுதிக்குள் நிரப்பப்படும்...

வரும் கல்வி ஆண்டில் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் தேர்வுகள் துவங்கி, முடிவுகளும் வெளியாகும்...

சென்னை வில்லிவாக்கத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்த பிரியாணியுடன் வந்த ரைத்தாவில் கிடந்த புழு...

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூரை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை...

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு... போலீசார் விசாரணை...

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் முதுகலை மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் இந்த மாத இறுதிக்குள் நிரப்பப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஒட்டி, அந்த தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகம் முழுவதும் ஆசிரியர் பணியில் சேர்வதற்கு 2 ஆயிரத்து 222 பேர் டிஆர்பி தேர்வு எழுதி காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், இந்த மாத இறுதிக்குள் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அவர் கூறினார்.

ஓசூர் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்துகளைக் கேட்கலாம்...

சென்னை சைதாப்பேட்யில் வயிற்றுப்போக்கு காரணமாக, சிறுவன் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, அந்த பகுதியில் 2-ஆவது நாளாக மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்