மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (14-12-2023)
- 11 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை முதன்மை செயலாளர் அமுதா உத்தரவு..
- சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக மகேஷ்வர் தயாள் ஐபிஎஸ் நியமனம்..
- தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம்..
- கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த், அதிகாரப்பூர்வ அறிவிப்பு..
- புயல் நிவாரணத் தொகை வழங்கும் நிகழ்வை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்..
- டோக்கன் பெறுபவர்கள், குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்டநேரத்தில் சம்பந்தப்பட்ட நியாய விலை கடையை அணுகி நிவாரணத் தொகையை பெறலாம்..
- நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா அவைக்கு வந்து விளக்கம் தர வலியுறுத்தல்..
- எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு..
- நாடாளுமன்ற மக்களவையில், வண்ண புகைக்குண்டு வீசி பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..
- கைதான 4 பேர் மீதும், உ.பா.சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து டெல்லி போலீஸ் விசாரணை..
Next Story