இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (02-10-2024) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines

x

கோவை ஈஷா யோகா மையத்தில் இரண்டாம் நாளில் சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த விசாரணை நிறைவு..

வரும் 4ம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்..

ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியல்வாதியைப் போல் செயல்படுகிறார்..

மத்திய- மாநில அரசுகளின் நல்லுறவை துண்டிக்கும் வகையில் அவரது செயல்பாடு இருப்பதாக, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி.

மதுவை ஒழிக்கும் முடிவை மத்திய அரசு தான் எடுக்க வேண்டும்..

மதுவிலக்கு கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்தால் ஆதரிப்போம் என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி..

காந்தி சிலைக்கு மாலை போட வந்தபோது காவல்துறை தன்னை தடுத்ததாக விசிக தலைவர் திருமாவளவன் கொந்தளிப்பு..

மகாத்மா காந்தியின் 2 கொள்கைகளை விசிக ஏற்றுக்கொண்டிருப்பதுதான், காந்திக்கும், நமக்கும் உள்ள நிலைப்பாடு என்றும் விளக்கம்..

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் மதுக்கடைகளை மூடினால், திமுகதான் மீண்டும் ஆட்சிக்கு வரும்..

மது ஒழிப்பு மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நம்பிக்கை..


Next Story

மேலும் செய்திகள்