இரவு 11மணி தலைப்புச் செய்திகள் (10-11-2024) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines

x

விருதுநகரில் புதிய ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே 400 ஏக்கரில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்... வீடற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை வழங்கப்படும்... பட்டாசு ஆலை தொழிலாளர்கள் விபத்தில் இறந்தால், அவர்களது குழந்தைகளின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என்றும் அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...

மக்களுக்கு பயன்படாத திட்டங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எதைக் கூறுகிறார் என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி... ஏக்கர் கணக்கில் பொய் சொல்வதோடு, புழுகு மூட்டைகளை ஈ.பி.எஸ். அவிழ்த்து விடுவதாகவும் விமர்சனம்...

"அ.தி.மு.க. அரசின் திட்டங்களை புறக்கணிக்கிறது தி.மு.க. அரசு..." "தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்..."

தாமிரபரணியில் ஆய்வு செய்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி, மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுரை... என்னை பற்றி முதலமைச்சர் விமர்சிப்பது கேலிக்கூத்தானது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி...

ஆண்டிப்பட்டி அருகே வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், மூழ்கிய தரைப்பாலம்... ஆபத்தை உணராமல் செல்லும் பொது மக்கள்...

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா கோலாகலம்... களை கட்டிய கலை நிகழ்ச்சிகள்...

பெண் கல்வியை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும்... எக்ஸ் தள பதிவில் வீடியோ வெளியிட்டு வலியுறுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்...


Next Story

மேலும் செய்திகள்