இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (09-07-2024) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines
விக்கிரவாண்டி தேர்தலை ஒட்டி வாக்குச்சாவடிகளில் போலீஸார் குவிப்பு...
தன்னை ரவுடி என்று அவதூறு பேசிய அண்ணாமலை மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடரப்படும்...
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை...
ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சு....
சென்னையில் உள்ள ஆம்ஸ்ட்ராங்க் இல்லத்துக்கு சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி...
திருச்சி மாவட்டம், முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களிடையே பயங்கர மோதல்...
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மகளிர் டி20 கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டியில் இந்திய அணி அபார வெற்றி...
அமெரிக்கா நாடாளுமன்றத் தேர்தலில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடி என வெளியான தகவலை சுட்டிக்காட்டி இவிஎம் இயந்திரங்களில் மோசடி செய்ய முடியும், தேர்தலை அவற்றை அகற்ற வேண்டும் என உலக பணக்காரர் எலான் மஸ்க் கடந்த மாதம் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த பாஜக, இந்தியாவில் தயாரிக்கப்படுவது போல் தயாரித்தால் ஹேக் செய்ய முடியாது என்றது. இவ்விவகாரத்தில் எலான் மஸ்க் - பாஜக இடையிலான வாக்கு வாதம் நாடு முழுவதும் உற்று நோக்கப்பட்டது. இப்போது மீண்டும் முந்தைய கால தரவுகளை எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கும் எலான் மஸ்க், வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்யலாம் எனவும் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை கடைபிடிக்க வேண்டும் எனவும், நேரில் சென்று வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.