இரு தரப்பினருக்கிடையே மோதல்.. போலீஸ் தலையை பதம் பார்த்த கல் - திமுகவினர் 5 பேர் மீது வழக்குப் பதிவு
தென்காசியில், தலைமைக் காவலரை தாக்கிய திமுகவினர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக, கடந்த 8-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வருகை தந்தார். அப்போது, முதல்வரை வரவேற்கும் விதமாக, ஸ்பீக்கர் ரேடியோ வைப்பத்தில், திமுகவைச் சேர்ந்த இருபிரிவினருக்கு இடையே மோதல் வெடித்தது. அதில் இருதரப்பினரும் மாறி மாறி கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் நிலைய தலைமை காவலர் சுந்தரபாண்டியன் மீது கல் விழுந்ததில் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பான புகாரின் பேரில், திமுக நிர்வாக முத்துப்பாண்டி உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Next Story