டெலிவரி ஊழியர்களுக்கு அசத்தலான வசதிகளுடன் ஓய்வு அறை - ZOMATO கொடுத்த இன்ப அதிர்ச்சி
- பிரபல உணவு விநியோக நிறுவனமான சோமேட்டோ, தங்கள் பணியாளர்கள் ஓய்வு எடுப்பதற்கு பயண வழியில் ஓய்வறைகள் அமைக்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
- 24 மணிநேரமும் உணவு டெலிவரி செய்யும் உணவு விநியோக நிறுவனங்கள், தங்கள் பணியாளர்களை சரியாக நடத்துவதில்லை என்று புகார்கள் எழுந்தன.
- இந்நிலையில், ஷெல்டர் புராஜெக்ட் என்ற திட்டத்தின்கீழ் ஓய்வெடுக்கும் வசதியினைஅந்த நிறுவனம் ஏற்படுத்தி தர இருக்கிறது.
- முதற்கட்டமாக குர்கானில் இரண்டு ஓய்வு அறைகள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.
- அந்த ஓய்வறைகளில், கழிவறை, குடிநீர், செல்போன் சார்ஜ் செய்யும் வசதி, வேகமான இணையதள வசதி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்த திட்டத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Next Story