"இனி உங்களுக்கு பிடித்த மொழிகளில்" - யூடியூப் வீடியோக்கள்
பல்வேறு மொழிகளில் ஒரு யூடியூப் வீடியோவை கேட்கும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி மற்றும் பஞ்சாபி மொழிகளில் ஏதாவது ஒரு மொழியை யூடியூப் செட்டிங்ஸ் மூலம் தேர்ந்தெடுக்க வகை செய்யப்பட உள்ளது. யூடியூப் வீடியோவை உருவாக்குபவர்கள், பல மொழிகளில் அதை டப் செய்ய, அலவ்ட் என்ற மென்பொருளை கூகுள் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மருத்துவக் குறிப்புகளுக்கான வீடியோக்கள், 2021இல் 3 ஆயிரம் கோடி பார்வைகளை ஈர்த்துள்ளதால், அவற்றை மொழி மாற்றம் செய்ய முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
Next Story