நடுரோட்டில் இஸ்லாமிய பெண்ணை மறித்து இளைஞர்கள் செய்த செயல் - தீயாய் பரவும் வீடியோ

x

இஸ்லாமிய பெண் ஒருவர், தமது ஆண் நண்பருடன் சம்பாஜி நகர் பகுதியில் உள்ள நினைவுச் சின்னம் ஒன்றை பார்வையிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது 3 இளைஞர்கள், அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி, மற்ற மதத்தை சேர்ந்த நபருடன் ஏன் பழகுகிறாய் என கூறி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்தப் பெண்ணை துரத்திச் சென்று, அந்த பெண்ணின் செல்போனையும் பறிக்க முயன்றனர். இதனை அங்கிருந்தவர்கள் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோவை அடிப்படையாக கொண்டு வழக்கு பதிவு செய்த போலீசார், மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்