சொத்து தகராறில் இளைஞர் சம்மட்டியால் அடித்துக் கொலை - உறவினர் வெறிச்செயல்

திண்டுக்கல் அருகே, சொத்து தகராறில், இளைஞர் சம்பட்டியால் அடித்துக் கொலை செய்யப்பட் சம்பவத்தில், கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
x

திண்டுக்கல் மாவட்டம் சென்னம்மா நாயக்கன்பட்டி அருகே உள்ள குரும்பபட்டி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் ராஜபாண்டி. பாண்டியனுக்கும், அவரது சகோதரியான அய்யம்மாள் என்பவருக்கும் இடையேயான சொத்துப் பிரச்சினை, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.


இந்த நிலையில், அய்யம்மாளின் மகனான சக்திவேல் என்பவர், சொத்தை எழுதிக் கொடுக்க வேண்டும் எனக் கூறி, பயங்கர ஆயுதங்களுடன் தனது ஆதரவாளர்களுடன் பாண்டியனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, ராஜபாண்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, சக்திவேல், சம்பட்டியால் தலையில் தாக்கியதில், ராஜபாண்டியன் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சக்திவேல் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்