இளைஞர் தீக்குளித்து தற்கொலை .. மனைவி உயிரிழந்த மன உளைச்சலில் தற்கொலை?

x

நெல்லையில் இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்த கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்பை அருகே சிவந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் தனசிங். இவரின் மனைவி 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இதனால், தனசிங் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தீடீரென தனசிங் வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்