பெயர்சூட்டு விழாவில் பயங்கரம்.. இளைஞர் காலில் கத்தி குத்து.. நரம்பு அறுந்து ரத்தம் கொட்டியதில் பலி
கேர ள மாநிலம் கொச்சியில், குழந்தை பெயர்சூட்டு விழாவில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் உயிரிழந்தார். கொச்சி பள்ளுருத்தி பகுதியை சேர்ந்த அனில்குமார் என்பவரின் உறவினர் குழந்தைக்கு பெயர் சூட்டுவிழா நடைபெற்றது. இதில், குழந்தையின் தாய்மாமன் ஜிதின் என்பவருக்கும், அனில்குமார் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இவர்கள், இரு குழுக்களாக பிரிந்து தகராறில் ஈடுபட்டனர். அனில் குமார் காலில், ஜிதின் கத்தியால் குத்தியதில் நரம்பு அறுந்து ரத்தம் கொட்டியது. அதிக ரத்த போக்கு காரணமாக அவர் உயிரிழந்தார். அனில்குமார் மீது பல வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். ஜிதினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story