தென்னந்தோப்பில் கழுத்தை அறுத்து இளைஞர் கொலை- 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு -தேனியில் அதிர்ச்சி சம்பவம்
தேனி மாவட்ட ம், பெரியகுளம் அருகே கஞ்சா விற்பனை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரியகுளத்தை அடுத்த அழகர்சாமிபுரத்தை சேர்ந்த விஜயராஜ் என்பவர், வெளியூரில் இருந்து 40 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி வந்த 2 கிலோ கஞ்சாவை விற்பனை செய்து தருமாறு தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். கஞ்சாவை விற்பனை செய்த நண்பர்கள், பணத்தை விஜயராஜிடம் கொடுக்காமல் இருந்ததால், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பணம் கொடுப்பதாக கூறி விஜயராஜை தென்னந்தோப்புக்கு வரவழைத்த நண்பர்கள், அவரை அரிவாளால் வெட்டியும் கழுத்தை அறுத்தும் கொலை செய்து விட்டு தப்பியோடினர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பெரியகுளம் போலீசார், சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை அவர்கள் தேடி வருகின்றனர்.
Next Story