15 அடி ஆழ தீ குழிக்குள் விழுந்த இளைஞர்-நொடியில் முடிந்த வாழ்க்கை...துண்டுத் துண்டாக மீட்கப்பட்ட உடல்
கேரளா பெரும்பாவூரில் தொழிற்சாலை கழிவுகளை எரிக்கும் 15 அடி குழியில் தவறி விழுந்த தொழிலாளி உடல் வெந்து சிதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கல்கத்தாவைச் சேர்ந்த 23 வயது நசீர் பிளைவுட் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். மரக்குப்பைகளை 15 அடி குழியில் கொட்டி தீ வைத்து எரிக்கும் போது நசீர் கால் தவறி குழிக்குள் விழுந்தார். தீயணைப்புத் துறையினர் எவ்வளவோ தேடியும் நசீரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு நாள் தேடுதல் வேட்டைக்கு பின் அவரது உடல் தீயில் வெந்து உருக்குலைந்த நிலையில் துண்டு துண்டாக மீட்கப்பட்டது. முறைகேடாக கழிவுகளை சேமித்து வைத்ததே விபத்துக்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குப்பையை அகற்ற 2 மாதங்களுக்கு முன் நோட்டீஸ் கொடுத்ததாக அசாமனூர் ஊராட்சி தெரிவித்துள்ளது.
Next Story