சுற்றுலா சென்ற இளைஞர்கள் பலி.. 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார் - ஏற்காடு கொண்டை ஊசி வளைவில் பயங்கரம்
ஏற்காடு அருகே, மதுபோதையில் இளைஞர் ஓட்டிவந்த கார் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார், தனது நண்பர்கள் விக்னேஷ் மற்றும் அருள்மணி உடன் காரில் ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்துள்ளார். விடுதியில் தங்கியிருந்த அவர்கள் ஏற்காட்டை சுற்றிப் பார்த்துவிட்டு, மது அருந்திய நிலையில் விடுதிக்கு திரும்பிய நிலையில், கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது ராஜ்குமார் ஓட்டிவந்த கார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனையடுத்து கயிறு மூலம் மீட்கப்பட்ட மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story