மாணவிகளிடம் ஹீரோயிசம் காட்ட நினைத்து ஆபத்தாக பைக் வீலிங் செய்யும் இளைஞர்கள் - வாகன ஓட்டிகள் அச்சம்

x

மதுரையில் இளைஞர்கள் சிலர், கல்லூரி மாணவிகளிடம் ஹீரோயிசம் காட்டுவதாக நினைத்து, ஆபத்தான முறையில் பைக் வீலிங் செய்து, வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளனர். மதுரையின் முக்கிய சாலைகள், மகளிர் கல்லூரிகள் இருக்கும் பகுதிகளில், இளைஞர்கள் சிலர் பைக்கில் வீலிங் செய்து, சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் ஆக பதிவிட்டு வருகின்றனர். ரீல்ஸ் மோகத்தால் உயிரின் மதிப்பை உணராமல் இளைஞர்கள் செய்யும் இந்த செயல், மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இளைஞர்கள் இத்தகைய செயல்களை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்