அக்காவை நடுரோட்டில் வெட்டி கொன்ற தம்பி...பல ஆண்களுடன் பழகியதால் வெறிச்செயல்....

x

கொல்லப்பட்டவர் இதே ஊரை சேர்ந்த பவித்ரா. 27 வயதாகும் இவருக்கு உச்சிப்புளியை சேர்ந்த முத்துகுமார் என்பவருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து, தாய் வீட்டிலேயே வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் தான் சம்பவம் நடந்த அன்று வீட்டில் இருந்த பவித்ரா, ரோடு வரை விரட்டி விரட்டி வெட்டிகொலை செய்யப்பட்டிருக்கிறார்.ரத்தத்தில் நனைந்திருந்த பவித்ராவின் சடலத்தை, மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரனையை தொடங்கி இருக்கிறார்கள்.

அப்போது தான் போலீசாருக்கே பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கொல்லப்பட்ட பவித்ரா சாதாரண ஆள் இல்லை... பெற்ற தந்தையையே பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த கொடூரமான மகள்.அந்த கொலை முதல் தற்போது நடந்திருக்கும் இந்த கொலை வரை அத்தனைக்கும் ஒரே காரணம் பவித்ராவின் கள்ளக்காதல்.ஆம்..... பவித்ரா சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள பல ஆண்களை தனது ஆசைப்பிடியில் அரவணைத்து வைத்திருந்த ஊர்க்குருவி. இவரது கள்ளக்காதல் வலையில் சிக்கிய ஆண்கள் ஏராளம். பவித்ராவின் கசமுசா வேலைகள் அவரது கணவனுக்கு தெரிந்ததால் தாய் வீட்டிற்கு விரட்டி அடிக்கப்பட்டிருக்கிறார்.

தாய் வீட்டிற்கு வந்தும் திருந்தாத பவித்ரா இடையர்வலசை பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்பவரோடு நெருங்கி பழகி இருக்கிறார். முருகானந்தம் அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். பவித்ராவின் இந்த கள்ளக்காதல் லீலைகள் ஒருகட்டத்தில் அவரது தந்தை ரவிக்கு தெரியவந்திருக்கிறது.கள்ளக்காதலை கைவிடும் படி கண்டித்திருக்கிறார். ஆனால் பவித்ரா கேட்பதாயில்லை. தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த தந்தையை, உறங்கும்போது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்திருக்கிறார். நடந்த சம்பவத்திற்கு பவித்ராவின் தாய் பாக்கியமும் உடந்தையாக இருந்துள்ளார்.இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பவித்ரா கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் சிறையில் இருந்து வெளியே வந்திருக்கிறார்.

சிறை சென்று திரும்பிய பிறகும் அவரது ஆட்டம் அடங்கவில்லை. கள்ளக்காதல் வளையத்தை மேலும் விரிக்க தொடங்கி பல ஆண்களுடன் பழகி வந்திருக்கிறார். இதனால் காவனூருக்கே பவித்ராவால் களங்கம் ஏற்பட்டிருக்கிறது. இது அவரது உறவினர்களுக்கு பெரும் ஆத்திரத்தை வரவழைக்க, பவித்ராவின் சித்தப்பா மகனான மணிகண்டன், அக்காவை கண்டித்திருக்கிறார். தனது சுதந்திரத்திற்கு தடை போட யார் வந்தாலும் மரணம் தான் முடிவு என நினைத்து, மணிகண்டனை கொலை செய்ய திட்டம் தீட்டி இருக்கிறார் பவித்ரா.இந்த தகவல் மணிகண்டனுக்கு தெரியவர, ஏற்கனவே பெரியப்பாவை கொன்று விட்டு, குற்ற உணர்ச்சி இல்லாமல் ஊருக்குள் உல்லாசமாக சுற்றி வரும் பவித்ராவை போட்டு தள்ள கையில் அரிவாளை எடுத்திருக்கிறார் மணிகண்டன்.சம்பவம் நடந்த அன்று வீட்டில் இருந்த பவித்ராவை தாக்க முற்பட்டிருக்கிறார். அந்த தாக்குதலில் இருந்து பவித்ரா தப்பி ஓடியதால், விடாமல் துரத்தி வந்து ரோட்டில் வைத்து வெட்டி வீசி உள்ளார் மணிகண்டன். இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.கள்ளக்காதல் சம்மந்தபட்டவர்களை மட்டுமில்லாமல், சுற்றியிருப்பவர்களையும் பாதிக்கும் என்பதை இந்த சம்பவம் நிரூபித்திருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்