வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம், நூதன முறையில் நகை திருடிய இளைஞர்கள்
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம், நூதன முறையில் நகை திருடிய இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சொக்கநாதபுரம் பகுதியில், விமலா என்ற பெண்ணிடம் கால் கொலுசு, தங்க சங்கிலிகளை மெருகேற்றி தருவதாக 2 இளைஞர்கள் கூறியுள்ளனர்.
கால் கொலுசு மெருகேற்றி கொடுத்த நிலையில், ஒன்றரை சவரன் தங்க சங்கிலியை அவர் வழங்கியுள்ளார்.
நகையை காகிதத்தில் சுற்றி 5 நிமிடங்கள் கழித்து திறந்து பார்க்க சொல்லிவிட்டு, அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.
காகிதத்தை திறந்து பார்த்தபோது அது உடைந்த பித்தளை சங்கிலி என்பது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக அந்த இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story