வாட்ஸ் அப்பில் இளமையான DP.. திருமணமானதை மறைத்து ரூ.14 லட்சம் மோசடி செய்த பெண்

x

இளமையாக இருப்பது போல் வாட்ஸ் ஆப்பில் டிபி (DP) வைத்தும், திருமணமானதை மறைத்தும் நபர் ஒருவரிடம் 14 லட்ச ரூபாய் பண மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

தாம்பரம் அருகே புது பெருங்குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். 40 வயதான இவர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உதவியாளராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு மேற்கு மாம்பலத்தை சேர்ந்த சரண்யா என்பவருடன் முகநூலில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில், வாட்ஸ் அப்பில் இளைமையாக இருப்பது போல் புகைப்படம் வைத்தும், திருமணமானதை மறைத்தும் சரண்யா பேசி வந்துள்ளார். இதில், நாகராஜனை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய அவர், நாகராஜிடம் இருந்து சிறுக சிறுக 14 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்படுவதை அறிந்த நாகராஜ் பணத்தை திரும்ப கேட்ட நிலையில், சரண்யா ப்ளாக் செய்திருக்கிறார். இது குறித்து நாகராஜ் அளித்த புகாரின் அடிப்படையில், சரண்யாவை கைது செய்த போலீசாருக்கு, அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வாங்கிய 14 லட்ச ரூபாயை செலவு செய்துவிட்டதாக கூறிய சரண்யாவை, போலீசார் சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்