பொய் வழக்கில் சிறை சென்ற இளைஞர்..வெளிவந்த பின் தெரிந்த உண்மைகள் - விரக்தியில் கயிறோடு மரத்தில் ஏறி...

x

கேரளாவில், பொய் வழக்கில் தன்னை கைது செய்த வனத்துறை அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தி பழங்குடியின இளைஞர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இடுக்கி மாவட்டம், கண்ணம்பாடி புத்தன்புரக்கல் பகுதியை சேர்ந்த இளைஞர் சருண் சாஜி, கடந்த ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி, மான்கறி கடத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், விசாரணையில், அவர் கொண்டு சென்றது மாட்டிறைச்சி என்பதும், வனத்துறையினர், அவரை பொய் வழக்கில் கைது செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீதான வழக்கை திரும்பப் பெற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே, இந்த வழக்கில், மனித உரிமைகள் மற்றும் பழங்குடியினர் ஆணையங்களின் தலையீட்டால், கடந்த டிசம்பர் 5ம் தேதி, பட்டியலிடப்பட்ட சாதி வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் 13 அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், 7 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்தனர். இந்நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்யக்கோரியும், பாதிக்கப்பட்ட சருண் சாஜி, கிக்குகாணம் வனத்துறையினர் அலுவலகம் எதிரே உள்ள பலாமரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்