தேவையில்லாத call உங்களுக்கு வரவே வராது.. அடுத்தடுத்த அப்டேட்களை அள்ளித்தரும் வாட்ஸ்அப் | WhatsApp
ருந்தாலும் பெரும்பான்மையான வாட்ஸ்அப் பயனர்கள் இந்த புதிய அம்சம் தேவையற்ற அழைப்புகளால் அதிகரித்து வரும் கவலைகளை நிவர்த்தி செய்யும் என்றும் வாட்ஸ்அப் வழியிலான மோசடிகள் மற்றும் ஸ்பேம்களால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
வாட்ஸ்அப் நிறுவனமானது ப்ரைவஸி செக்கப் என்கிற மேலும் ஒரு அம்சத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இது வாட்ஸ்அப்பில் உள்ள அத்தியாவசியமான ப்ரைவஸி செட்டிங்ஸ்களை பற்றி பயனர்களுக்கு வழிகாட்டும் அம்சமாகும். இது ப்ரைவஸி செட்டிங்ஸில் உள்ள ஸ்டார்ட் செக்கப் என்கிற விருப்பத்தின் கீழ் கிடைக்கும்.மேலும்
'ஸ்டார்ட் செக்கப்' என்பதை தேர்ந்தெடுப்பதன் மூலம், பயனர்கள் தங்கள் மெசேஜ்கள், அழைப்புகள் மற்றும் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் செயல்முறையை அணுகலாம். ப்ரைவஸி செக்கப் வழியாக பயனர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ற சரியான அளவிலான பாதுகாப்பை தேர்வுசெய்ய முடியும்.