"லஞ்சம் வாங்குவதற்கு கோயில் வாசலில் பிச்சை எடுக்கலாம்" - வெளுத்து வாங்கிய அதிகாரி
லஞ்சம் வாங்குவதற்கு கோயில் வாசலில் பிச்சை எடுக்கலாம் என கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளை, லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் வெளுத்து வாங்கி சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக, தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. கடந்த மாதம் கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலரே லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையில், விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது தொடர்ந்து லஞ்ச புகார்கள் வருவது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளை, தேவநாதன் வெளுத்து வாங்கினார். லஞ்சம் வாங்குவதற்கு கோயில் வாசலில் பிச்சை எடுக்கலாம் என கடுமையாக சாடிய அவர், இனி லஞ்சம் வாங்குவதாக புகார் வந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.