யோகிபாபு, தயாரிப்பாளரை மிரட்டும் 'தாதா' - '"குடும்பத்துடன் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை..."
யோகிபாபு, தயாரிப்பாளரை மிரட்டும் 'தாதா' - '"குடும்பத்துடன் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை..." - கண்ணீர் மல்க துரைராஜன் கோரிக்கை
தாதா திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் துரைராஜன், இணை தயாரிப்பாளர் விஜய் போஸ் ஆகியோர் மனு அளித்தனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் துரைராஜன், மணி என்ற படத்தின் ஹார்டிஸ்கை கிஷோர் குமார் என்பவர் திருடி, தாதா என பெயர் மாற்றியதாக குற்றம் சாட்டினார்.
தாதா திரைப்படத்தில் தான் நடிக்கவில்லை என யோகி பாபு விளக்கம் அளித்த நிலையில், அவரை வைத்து கிஷோர் குமார் பிரமோஷன் செய்து வருவதாக குறிப்பிட்டார்.
மேலும், தாதா படத்தை வெளியிட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என, கண்ணீர் மல்க துரைராஜன் கூறினார்.
Next Story