தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்திரை பதித்த எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைந்த தினம் இன்று.

x

1934ல் கடலூர் அருகே உள்ள மஞ்சக்குப்பத்தில் ஒரு வேளாண் குடும்பத்தில் பிறந்த ஜெயகாந்தன், ஐந்தாம் வகுப்பு வரை மட்டும் பள்ளிக் கல்வி கற்றார்.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி, இவரின் பள்ளித் தோழர் என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தையுடன் ஏற்பட்ட பிணக்கினால், வீட்டை விட்டு வெளியேறிய ஜெயகாந்தன், 14 வயதில் சென்னை சென்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில்

தங்கினார்.

சி.பி.ஐயின் ஜனசக்தி இதழில் அச்சுக் கோர்ப்பவராக பணியாற்றினார். பழம் பெரும் கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தத்தின் வழிகாட்டுதலில், படிப்படியாக

வளர்ந்தார்.

பின்னர் சி.பி.ஐ கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்து காமராஜரின் தீவிர தொண்டராக மாறினார். காங்கிரஸ் பிரச்சார மேடைகளில் அனல் தெறிக்க

உரையாற்றி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

அவரது இலக்கிய வாழ்க்கை 1950களில் தொடங்கியது. சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகி, பெரும் புகழ் பெற்றார். இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்பட்டார்.

இவரது நாவல்களான உன்னைப் போல் ஒருவன் மற்றும் சில நேரங்களில் சில மனிதர்கள் ஆகியவை படமாக்கப்பட்டன. இவர் இயக்கத்தில் வெளியான உன்னைப் போல் ஒருவன் சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான குடியரசுத் தலைவர் விருதைப் பெற்றது. யாருக்காக அழுதான் மற்றும் புது செருப்பு கடிக்கும் ஆகிய படங்களையும் இயக்கினார்.

145 சிறு கதைகள், 42 நாவல்கள் மற்றும் குறுநாவல்கள் எழுதியுள்ள ஜெயகாந்தன் 1972ல் சாகித்திய அகாடமி விருது பெற்றார். 2002ல் ஞான பீட விருது பெற்றார். 2009ல் மத்திய அரசு இவருக்கு பத்ம பூஷண் விருது அளித்து கெளரவித்தது.

2015 ஏப்ரல் 8 அன்று, தனது 81 வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.


Next Story

மேலும் செய்திகள்