ஐயப்ப பக்தர்கள் நடத்திய விநோத வழிபாடு, அன்னதானம் சாப்பிட்ட இலையில் அங்கபிரதட்சணம்

x

தஞ்சையில் பக்தர்கள் அன்னதானம் சாப்பிட்ட இலையில் ஐயப்ப பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் செய்து விநோத வழிபாடு நடத்தினர். தான்தோன்றி அம்மன் கோயிலில் பரிவார தெய்வமாக எழுந்தருளி அய்யப்பன் அருள் பாலித்து வருகிறார். ஐயப்பனுக்கு முப்பதாம் ஆண்டு மணிவிழா பூஜையை முன்னிட்டு ஆயிரத்தெட்டு கலசங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து சரண முழக்கத்துடன் 18 படிகளில் தீபம் ஏற்றி ஐயப்பனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் அன்னதானம் சாப்பிட்ட இலையில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்து வழிபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்