2011 World Cup வின்னிங் 'சிக்ஸருக்கு' நினைவு சின்னம்..!- வான்கடேயில் "தல" தோனிக்கு கவுரவம்

x
  • 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி போட்டியில், தோனி அடித்த இறுதி சிக்ஸருக்கு, வான்கடே மைதானத்தில் நினைவு சின்னம் அமைக்கப்படவுள்ளது.
  • 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தியாவும், இலங்கையும் மோதிய அந்த போட்டியில், அப்போதைய இந்திய அணி கேப்டன் தோனி சிக்சர் அடித்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தார்.
  • அதற்கு, நினைவு சின்னம் அமைக்கப்படும் என மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் அமோல் காலே கூறியுள்ளார்.
  • மைதானத்தில் பந்து விழுந்த இடத்திலேயே நினைவு சின்னம் அமைக்கப்படும் எனவும், அந்த நினைவு சின்னம், தோனி விளையாடிய இன்னிங்சிற்கு தகுந்த மரியாதையாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
  • மேலும் அந்த நினைவு சின்னம் தோனியின் அடிச்சுவட்டை பின்பற்ற பல இளைஞர்களை ஊக்குவிக்கும் எனவும் அமோல் காலே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்