உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் - பி.வி. சிந்து திடீர் விலகல்

x

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் - பி.வி. சிந்து திடீர் விலகல்


காயம் காரணமாக உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து, இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து விலகி உள்ளார்.ஜப்பானின் டோக்கியோ நகரில் வருகிற 21ம் தேதி உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்குகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இருந்து விலகுவதாக காமன்வெல்த் தொடரில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி. சிந்து அறிவித்து உள்ளார். காமன்வெல்த் காலிறுதிப் போட்டியில் இடது காலில் காயம் ஏற்பட்டதாகவும், இறுதிப் போட்டியின்போது வலி தாங்க முடியாமல் ஆடியதாகவும் அவர் கூறி உள்ளார். ஐதராபாத் திரும்பியவுடன் ஸ்கேன் செய்ததில், இடது காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்ததாகவும், மருத்துவர்களின் பரிந்துரைப்படி சில வாரங்கள் ஓய்வு எடுக்க உள்ளதாகவும் பி.வி. சிந்து கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்