மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: வங்கதேசத்தைப் பந்தாடியது ஆஸ்திரேலியா
- மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் வங்கதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது.
- செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் ஆடிய வங்கதேசம் 7 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது.
- அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் நிஹர் சுல்தானா அரைசதம் அடித்தார்.
- பின்னர் 108 ரன்கள் என்ற எளிய இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலியா, 18 புள்ளி 2 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, இலக்கை எட்டியது.
- ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லேனிங் 48 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.
Next Story