மகளிர் உரிமைத்தொகை குறித்து முதல்வர் ஸ்டாலின் விரிவான ஆலோசனை
- தமிழ்நாடு அரசின் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
- தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்திவரும் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம், இன்று காலை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.
- இந்த கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த, நடைமுறையில் உள்ள 68 திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும், 6 எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
- குறிப்பாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும், மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டம் குறித்தும், முதல்வர் ஸ்டாலின் விரிவான ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
- இதில் அமைச்சர்களும், உயரதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.
Next Story