மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் - நேரில் சந்திக்கிறார் திமுக எம்.பி அப்துல்லா
டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் 9வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங், இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் மீது டெல்லி போலீசார் போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அவரைக் கைது செய்யக்கோரி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போஹத், சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் ஒரு வாரத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
இந்நிலையில், வீராங்கனைகளின் போராட்டம் 9வது நாளை எட்டியுள்ளது. மல்யுத்த சம்மேளனத் தலைவரைக் கைது செய்ய வேண்டும் என வீராங்கனைகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
Next Story