"பெண்கள் தைரியமாக வளர வேண்டும்"- கனிமொழி எம்.பி., அட்வைஸ்
பெண்களின் உடை மீது குறை சொல்லக்கூடாது, ஆண்களை சரியாக வளர்க்க வேண்டும் என, கனிமொழி எம்.பி., கூறினார். திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில், எம்.பி., கனிமொழி, அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். கடந்த கல்வியாண்டில் பல்கலைக்கழக தரவரிசை தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகள், கல்லூரியின் பல்வேறு துறைகளில் முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு கனிமொழி எம்.பி., தங்கப்பதக்கம் வழங்கினார். பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், கிறிஸ்தவ கல்லூரியில் இஸ்லாமியர்களுக்கு மதிப்பு அளிக்கிறோம் என்றார்.
Next Story