மர்மமான முறையில் பெண் உயிரிப்பு...விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
மர்மமான முறையில் பெண் உயிரிப்பு...விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான அத்திகோயில் பகுதியை சேர்ந்த் வனராஜ் என்பவர், ஏசுராணி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன. கான்சாபுரம் அத்திகோவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தனியார் தோட்டத்தில், குடும்பத்துடன் தங்கியிருந்து வனராஜ், காவல் வேலை செய்து வந்துள்ளார். மோட்டார் அறையின் மாடியில், வனராஜ் மற்றும் அவரது மனைவி இருவரும் தங்கியுள்ளனர். இந்த நிலையில், உடலில் காயங்களுடன் ஏசுராணி இறந்து கிடந்தார். தகவலின் பேரில் வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த செய்த போலீசார், ஏசுராணியின் கணவர் வனராஜிடம், தங்களது பாணியில் விசாரணை நடத்தினர். அப்போது, ஆத்திரத்தில் மனைவியை கொன்றது தெரியவந்ததை அடுத்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.