சென்னையில் ஹீட்டரால் நேர்ந்த கோரம்.. திடீரென வந்த கரெண்ட்...தூக்கிவீசபட்டு துடிதுடித்து பலியான பெண்
- பாலாஜி நகரைச் சேர்ந்த தேவி என்பவர், இன்று காலை வழக்கம்போல் குளிப்பதற்காக ஹீட்டர் போட்டுவிட்டு சென்றுள்ளார். திடீரென அப்பகுதியில் மின்சாரம் தடை செய்யப்பட்டு இருந்ததால், ஹீட்டரில் இருந்து வாலி மூலம் தண்ணீர் எடுக்க முயன்றுள்ளார். அப்போது,
- மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தேவியிடம் தொலைபேசியில் பேசுவதற்காக அவரது சகோதரர் நீண்ட நேரமாக அழைப்பு விடுத்துள்ளார். அவர் அழைப்பை எடுக்காததால் சந்தேகம் அடைந்த சகோதரர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, தேவி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரிய வந்தது.
- இது குறித்த புகாரைத்தொடர்ந்து, சங்கர் நகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story