இயற்கை உபாதைக்கு சென்ற பெண்கள்.. கல்குவாரியில் மிதந்த சோகம் - திருவள்ளூரில் பரபரப்பு

x

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், இயற்கை உபாதை கழிக்கச் சென்ற மூன்று பேர், கல்குவாரி நீரில் மூழ்கி உயிரிழந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் பார்வதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிலர், துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக, திருத்தணிக்கு சென்றனர். அப்போது, இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இரண்டு சிறுமிகள், ஒரு பெண் ஆகியோர் 50 அடி ஆழம் கொண்ட கல்குவாரி நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், மூன்று பேரின் உடல்களையும் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த திருத்தணி போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்